• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

அனிருத்தின் தாத்தா காலமானார்!!

ByA.Tamilselvan

Sep 26, 2022

தமிழ் சினிமாவின் பழபெரும் இயக்குநரும், இசையமைப்பாளருமான எஸ்.வி.ரமணன் காலமானார்.
பழம்பெரும் தயாரிப்பாளரும், இயக்குநருமான கே.சுப்பிரமணியம் மகன்களில் ஒருவரான எஸ்.வி.ரமணன் சுதந்திரத்திற்கு முன்பு வெளியான சில தமிழ் படங்கள் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகியிருந்த இவர், அவ்வப்போது பின்னணி குரல் கொடுத்தும் வந்தார். தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர் இவரது பேரன். அதே போல் இவரது மற்றொரு பேரன் ரிஷிகேஷ் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷுக்கு தம்பியாக கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
எஸ்.வி.ரமணன் வயது மூப்பின் காரணாமாக இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு செய்தி திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையிலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.