• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தொடர்ந்து சரியும் இந்திய ரூபாயின் மதிப்பு

ByA.Tamilselvan

Sep 27, 2022

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடந்த 4 நாட்களில் இதுவரையில் இல்லாத வகையில் வீழச்சியடைந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. கடைசியாக கடந்த 24-ந்தேதி 30 காசுகள் சரிந்து, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.81.09 ஆக இருந்தது. இது நேற்று மீண்டும் 58 காசுகள் வீழ்ச்சியடைந்தது. அதன்படி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.81.67 ஆக சரிந்து உள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி ஆகும். ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 4 நாட்களாக வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்த 4 நாட்களில் 193 காசுகள் சரிந்திருப்பதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.