கரூர் மாவட்டம் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பத்மாவதி மற்றும் மாவட்ட செயலாளர் சாந்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மே மாதம் கோடை விடுமுறையை முழுமையாக வழங்கிட வேண்டும்,

காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். நீண்ட காலம் பணி செய்து வரும் அங்கன்வாடி பணியாளர்களை நிரந்தர படுத்திட வேண்டும். பல்வேறு குளறுபடியை உருவாக்கும் THR திட்டத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும். உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் தொடர் இரவில் இருந்து பகல் வரை இரண்டாம் நாள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.