• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ByN.Ravi

Feb 29, 2024

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, சோழவந்தான் சமயநல்லூர் ரயில் நிலையமங்களுக்கு இடையில் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் நேற்று இரவு எட்டு மணி அளவில் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
முதியவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது ரயிலில் மோதி அடிபட்டு இறந்து கிடந்தாரா போன்ற தகவல் குறித்து ரயில்வே போலீசார் முதியவர் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இவரைப் பற்றிய முழு விபரங்கள் இல்லாததால், தகவல் தெரிந்தவர்கள் மதுரை இருப்புப் பாதை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறப்பட்டுள்ளது.