• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நீலகிரி அருகே தொடரும் யானை அட்டகாசம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த பெரியார் நகர் மேல் குந்தா பகுதிகளில் தொடர்ந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானை ஏழு நாட்களாக ஒற்றைக் காட்டு யானையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இன்று காலை ஆறு மணி அளவில் ஒற்றை காட்டு யானையை ஆனது பெரியார் நகர் பகுதி சேர்ந்த விவேக் என்பவரின் விவசாயத் தோட்டத்திலிருந்து கேரட்டுகளை ருசி பார்த்து சென்றுள்ளது சுமார் அரை ஏக்கருக்கு மேலாக கேரட்டுகளை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தி உள்ளது கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தடுப்பு வேலிகளை பிடுங்கி எரிந்து தண்ணீர் பீச்சும் கருவிகள் போஸ்டர்கள் தண்ணீர் ட்ரம்முகள் போன்ற வற்றை சேதப்படுத்தி சென்றது.


கடந்த இரண்டு நாட்களாக தடுப்பு வேதிகளை புதுப்பித்தும் தண்ணீர் டேங்குகள் நீர் பாய்ச்சும் இயந்திரங்களை புதிதாக அமைத்து வந்தனர் மீண்டும் விவசாய நிலத்தில் களமிறங்கிய காட்டு யானை தடுப்பு வேலைகளை பிடுங்கி எறிந்தும் புதிதாக அமைத்திருந்த அனைத்து கருவிகளையும் சேதப்படுத்தி உள்ளது.
யானை வந்த தகவலை தோட்டத்தில் உரிமையாளர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.வனத்துறையினர் சேதப்படுத்திய இடத்தை பார்வையிடவும் யானை எங்கு பதுங்கி உள்ளது என்பதை காணவும் வராததால் விவசாயிகள் விவசாய நிலத்தில் தீ மூட்டி காவல் காத்து வருகின்றனர் கடந்த முறை விவசாய நிலத்தை சேதப்படுத்திய போது வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மீண்டும் மீண்டும் விவசாய நிலங்களை சேதப்படுத்த வரும் யானையை விரட்டவும் மீண்டும் வராதவாறு தடுக்கவும் வனத்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை