• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

உலக ரத்த தான தினமான இன்று காரைக்குடியில், இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு பேரணி

ByG.Suresh

Jun 15, 2024

உலக ரத்த தான தினமான ஜூலை 14 வெள்ளிக்கிழமை இன்று காரைக்குடியில், காலை ஏழு மணி அளவில் பெரியார் சிலையில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் வரை இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ரவி, காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் துவக்கி வைத்து முடிவில் சிறப்புரையற்றினர்.

நிகழ்ச்சியை தமிழக காவல்துறை அழகப்பா பல்கலைக்கழகம், குளோபஸ் மிஷின் மருத்துவமனை 6 எக்ஸ் ,காரைக்குடி சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்தினர். காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் குமரேசன் அனைவரையும் வரவேற்று, இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை விளக்கி கூறினார்.
சமூக ஆர்வலர் இஸ்மாயில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.மேலும் நிகழ்ச்சியில் விவேகானந்தன், டாக்டர். ராமசுப்பு, திருஞானம், பிரகாஷ் மணிமாறன் குருதி கொடையாளர்கள், சமூக ஆர்வாளர்கள், NSS அமைப்பை சேர்ந்தவர்கள், நடையா கள் சங்கத்தினர் மற்றும் மாணவ, மாணவியர் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு டைம்ஸ் ஹெல்த் கேர் ஃபவுண்டேஷன் மற்றும் சாரிட்டபிள்
டெரஸ்ட். நிகழ்ச்சி முடிவில் பிளட் டோனர்ஸ் டாட்.காம் என்ற வெப்சைட் துவங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவத்தினர்.