• Fri. Jan 17th, 2025

கோவை துடியலூர் அருகே காசிநஞ்சே கவுண்டன் புதூர் பகுதியில் இன்று அதிகாலை 35வயது மதிக்கத்தக்க கூலித் தொலிலாளியை மர்மநபர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

BySeenu

Mar 10, 2024

கோவை துடியலூர் அருகே காசிநஞ்சே கவுண்டன் புதூர் பகுதியில் இன்று அதிகாலை மதுரை தெற்குத் தெருவைச் சேர்ந்த ஜெய்கணேஷ் என்ற 35 வயது மதிக்கத்தக்க கூலித் தொலிலாளியை மர்ப நபர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். துடியலூர் போலீசார் உடலைக் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அதிகாலை நடந்த கொலையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் இவரது மகன் ஜெய்கணேஷ் 35 வயதான இவர் கோவை துடியலூர் அருகே சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில் காசி நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் வந்துகொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் ஜெய்கணேசை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஜெய்கணேஷ் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார் ஜெய்கணேசின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர். அதிகாலை நடந்த கொலையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.