
கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் கோயமுத்தூர் ஆட்டோ ஓட்டும் வீரப்பெண்கள் அமைப்பு ஆகியோர் இணைந்து நடத்திய மகளிர் தின விழாவில், சென்னை உட்பட கோவையில் பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சிங்கப்பெண் விருது வழங்கி கவுரவிப்பு.
அனைத்து துறைகளில் பெண்கள் தற்போது சாதித்து வரும் நிலையில் ஆட்டோ ஓட்டும் பெண்களை கவுரவிக்கும் விதமாக கோவையில் பெண் ஆட்டோ ஓட்டுனர்களை கவுரவிக்கும் விழா நடைபெற்றது..உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியை கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் கோயமுத்தூர் ஆட்டோ ஓட்டும் வீரப்பெண்கள் அமைப்பு ஆகியோர் இணைந்து நடத்தினர்..கொடிசியா அருகில் உள்ள ஜே.ஆர்.அரங்கில் நடைபெற்ற விழாவை,நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் பொருளாளர் எழுத்தாளர் கனலி என்கிற சுப்பு, குமாரி தேஜஸ்வினி ,கோவை ஆட்டோ ஓட்டும் வீரப்பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பூர்ணிமா,பாக்கியலட்சுமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்..நிகழ்ச்சியில் ரேவதி மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக முன்னால் கவர்னர் டாக்டர்.சாரதா மணி பழனிசாமி,கூட்டு மாவட்ட தலைவர் கருணாநிதி , ஆகியோர் கலந்து கொண்டு பெண் ஓட்டுனர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தனர்…நிகழ்ச்சியி்ல், சென்னை,கோவை உட்பட பல்வேறு நகரங்களில் ஆட்டோ ஓட்டும் பெண் ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.. இதில் மகளிர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சிங்கப்பெண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது..விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி ஆளுநர் நித்யானந்தம்,பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி முன்னாள் மாவட்டம் செய்தி தொடர்பு தலைவர் செந்தில் குமார்,கூட்டு மாவட்ட தலைவர் கருணாநிதி,பசிப்பிணி போக்கும் திட்ட தலைவர் செல்வராஜ், நேரு நகர் லயன்ஸ் சங்க தலைவர் மோகன்ராஜ், ஆனந்தகுமாரி முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜ்மோகன்,மண்டல தலைவர்கள் நெடுமாறன்,ஸ்ரீராம்,மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் லோகநாதன் நந்தகுமார், கார்த்திக், பால்ராஜ், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்..
