

அமெரிக்காவில் நடைபெற்ற ஆளுநர் தலைமை பண்பு பயிலரங்கத்தில் கலந்து கொண்டு கோவை திரும்பிய 324 சி மாவட்ட வருங்கால ஆளுநர் நித்யானந்தம் அவர்களுக்கு பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி நிர்வாகிகள் சார்பாக கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.
பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி சார்பாக,, பசிப்பிணி போக்குவது, குழந்தைகள் புற்றுநோய்க்கான இலவச சிகிச்சை, நீரிழிவு நோய்க்கான டயாலிசிஸ் இலவச சிகிச்சை,கல்வி உதவி தொகை வழங்குவது,கண்ணொளி திட்டம்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு,, போன்றவற்றில் விழிப்புணர்வு மற்றும் சமூக நல செயல்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்..இந்நிலையில் லயன்ஸ் கிளப் 324 சி மாவட்டம் புதிய ஆளுநராக தற்போதைய , முதலாம் துணை ஆளுநர் டாக்டர் நித்யானந்தம் பதவி ஏற்க உள்ளார்.2024-25 ஆம் ஆண்டு கவர்னராக பதவி ஏற்பதற்கு முன்பாக, அமெரிக்காவில் நடைபெற்ற லயன்ஸ் மாவட்ட ஆளுநருக்கான தலைமை பண்பு பயிலரங்கத்தில் கலந்து கொள்ள கோவையில் இருந்து கடந்த மாதம் சென்றிருந்தார்.உலகம் முழுவதும் இருந்து 704 கவர்னர்கள் கலந்து கொண்ட பயிலரங்கத்தை நிறைவு செய்து கோவை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில், 324 சி மாவட்ட லயன்ஸ் நிர்வாகிகள் சார்பாக உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.இதே போல பயிலரங்கத்தை நிறைவு செய்து திரும்பிய 324 D வருங்கால ஆளுனர் சண்முக சுந்தரம் அவர்களுக்கும் வரவேற்பு வழங்கப்பட்டது..தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் நித்யானந்தம்..,
பன்னாட்டு லயன்ஸ் இயக்கத்தின் பல்வேறு சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது குறித்த பயலரங்கத்தில் கலந்து கொண்டதாக குறிப்பிட்ட அவர்,704 கவர்னர்கள் கலந்து கொண்ட பயிலரங்கத்தில் சிறந்த பத்து கவர்னர்களில் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐ பேட் பரிசாக பெற்றதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.தொடர்ந்து அவர் இளைய சமுதாயத்தினருக்கு போதை பொருட்களின் தீமைகள் குறித்து அதிக விழப்புணர்வு தேவைப்படுவதாக கூறிய அவர்,தாம், இதில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்தார்..விமான நிலையத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் 324 சி கிளப் மற்றும் கிளை அமைப்பு நிர்வாகிகள் 324 சி மாவட்ட முன்னால் செய்தி தொடர்பு தலைவர் அரிமா செந்தில் குமார்,,சிட்கோ முத்துசாமி,அக்னி சரவண குமார்,உதயம் பேச்சி முத்து,நேரு நகர் மோகன் ராஜ்,பொள்ளாச்சி சம்பத்,இண்டகிரிட்டி ரவிசங்கர்,சிகரம் கோபாலகிருஷ்ணன், பொள்ளாச்சி சரண்,போட்டோ ரவி,சி.எஸ்.கே.வெங்கட கிருஷ்ணன்,சூலூர் வெங்கடேஷ்,ஈஸ்வரன்,பொள்ளாச்சி விமலேஷ்,சந்திரசேகர்,324 D மோகன் குமார்,சித்ரா சண்முகசுந்தரம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட லயன்ஸ் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

