• Fri. Apr 19th, 2024

ஆண்டிபட்டியில் ஆயுத பூஜை பொருட்கள் வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்..!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஆயுதபூஜை,சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாகவே பிரதான சாலை மற்றும் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணபடுகிறது.
இந்நிலையில் இன்று காலை முதலே ஆண்டிபட்டி முக்கிய பகுதிகளான கடைவீதி,பூமார்க்கெட் மற்றும் பேருந்து நிலைய பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக பூஜை பொருட்களான பூ, மாலை, தேங்காய், மற்றும் வாழைகன்று, மஞ்சள் கிழங்கு, பொரி, போன்றவற்றை சாமி கும்பிட வாங்கி செல்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டினர்.

இதனால் பெரும்பாலான கடைகளில் கூட்டமாகவே காணபட்டது. மேலும் காலை முதலே மக்கள் தங்களது வீடுகள் மற்றும் வாகனங்களை சுத்தம் செய்தனர்,கடைக்காரர்கள் கடைகளை சுத்தம் செய்து மாவிலைகள் தோரணங்கள் மற்றும் வாழை கன்றுகளை கடைகளில் கட்டி வருகின்றனர். பலவகையான தொழில் புரிபவர்கள் அவர்களது கருவிகளை கடவுளின் முன்பு வைத்து வழிபடவும், மாணவர்கள் தங்களது புத்தகங்களை வைத்தும் வழிபடவும் தயாராகி வருகின்றனர்.


மேலும் கார், ஆட்டோ, வேன், இருசக்கர வாகனங்களை அதன் உரிமையாளர்கள் தண்ணீர் விட்டு கழுவி ,சுத்தம் செய்து பூஜை செய்ய தயாராகி வருகின்றனர். ஆட்டோ ஸ்டாண்டுகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் இருப்பதால், ஒலிபெருக்கிகள் மற்றும் ஒளி அமைப்புகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தங்கள் வாகனங்களை சாமி கும்டுவதற்கு தயார்படுத்தி வருகின்றனர்.


இதனால் சாலைகள், தெருக்கள், வீடுகள், மற்றும் கடைகள் நிறுவனங்கள், அலுவலகங்கள் மங்களகரமாக காட்சி அளித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *