
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலர்களாக கமல்ஹாசன் உட்பட 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் எண்ணப்பட்டது. இதில், பாண்டவர் அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி, துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் நேற்று பதவியேற்றனர். அதன்படி, நாசர் நடிகர் சங்க தலைவராகவும், பொதுச்செயலாளராக விஷாலும் மற்றும் வெற்றி பெற்ற மற்ற நிர்வாகிகளும் பதவியேற்று கொண்டனர்.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலர்களாக கமல்ஹாசன் உட்பட 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிர்வாக குழுவில் இருந்து நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுக்குழுவில் குழுவில் இருந்து கமல்ஹாசன், பூச்சி முருகன், சச்சு ஆகியோரும், செயற்குழுவில் இருந்து ராஜேஷ், லதா சேதுபதி, கோவை சரளா ஆகியோரும் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

