



மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளினை முன்னிட்டு, 4334 தூய்மை பணியாளர்களுக்கு உணவுகளை, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்கள். இந்நிகழ்வில், மதிப்பிற்குரிய மேயர் இந்திராணி பொன்வசந்த் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா,
மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர், டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்த நாளினை சமத்துவ நாளாக கொண்டாடுமாறு அறிவித்து உள்ளார்கள். அதன்படி,
மதுரை மாநகராட்சி ஐந்து மண்டலங்களில் பணியாற்றும் சுமார் 4334 தூய்மை பணியாளர்களுக்கு அந்தந்த மண்டலங்களிலேயே சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையில் மதிய உணவுகள், குடிநீர் பாட்டில்கள், ஓர்.ஆர்.எஸ்.கரைசல் உள்ளிட்டவை வழங்குவதற்கு மாநகராட்சியின் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் மண்டலம் 2க்கு உட்பட்ட வார்டுகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர் களுக்கு உணவுகளை , தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்ச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
மேலும், வெயில் தாக்கம் அதிகரிக்கும் வகையில் உடலின் நீர்ச்சத்து மற்றும் நீர் இழப்பினை சமநிலை செய்வதற்காக மாநகராட்சியின் சார்பாக ஓர்.ஆர்.எஸ்.கரைசல் பவுடரையும் தூய்மை பணியாளர்களுக்கு , அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில், துணை மேயர தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, உதவி ஆணையாளர்கள் மணியன், பார்த்தசாரதி, சாந்தி, நகர்நல அலுவலர் மரு.இந்திரா, உதவிப்பொறியாளர் அமர்தீப், உதவி செயற்பொறியாளர் காமராஜ், சுகாதார அலுவலர் சிவசுப்பிர மணியன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

