மதுரை பெருங்குடி அம்பேத்கர் நகரில் மாரிமுத்து என்பவரது மகன் கருமலை (வயது 26) வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த பெருங்குடி போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அதனையடுத்து உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்து ஒரு மணி நேரமாக கொலை செய்யப்பட்ட கருமலையின் உடலை எடுக்க விடாமல் தகராறு செய்து வருகின்றனர்.

மேலும் முனியாண்டி மகன் பாலமுருகன் (வயது26) கருமலை, இருவரும் நண்பர்கள் .
ஏற்கனவே பெருங்குடி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் கருமலை என்பவர் முதல் குற்றவாளியாகவும் பாலமுருகன் என்பவர் ஆறாவது குற்றவாளியாகவும் இருந்து சிறையில் இருந்தனர்.
ஏற்கனவே சிறையில் இருந்து வெளிவந்த பாலமுருகன் மற்றும் கருமலை இருவருமே மற்றொரு ஆயுத வழக்கில் கருமலை கைது செய்யப்பட்டு தற்போது மூன்று நாட்களுக்கு முன் ஜாமின்-ல் வெளிவந்துள்ளார்.
பெருங்குடி அம்பேத்கர் நகரில் இருந்தாலும் பிரச்சனை காரணமாக கீரை துறையில் இருந்து இன்று தனது நண்பர் பாலமுருகனை பார்க்க வந்துள்ளார். அதனை அறிந்து கொலையாளிகள் மூன்று வாகனங்களில் ஆறு பேர் கொண்ட கும்பல் கருமலை மற்றும் பாலமுருகனை விரட்டி வந்து வெட்டி சாய்த்தது. இதில் பலத்த காயமடைந்த பாலமுருகனை போலீசார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கருமலையின் உடலை உறவினர்கள் எடுக்கவிடாமல் செய்து உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியதின் பேரில் போலீசார் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்வோம் தண்டனை வாங்கி தரும் என்று உறுதி அளித்ததன் பேரில் கருமலையின் உடல்நிலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

முனீஸ்வரன் கொலை வழக்கு தொடர்பாக பழிக்குப் பழியாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. அதனை தொடர்ந்து குற்றவாளிகள் ஆறு பேரை தேடி வருகின்றனர்.
கொலை சம்பவம் நடந்த பெருங்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் திருமங்கலம் ஏடிஎஸ்பி மன்சூர் நாகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.