• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அம்பத்தூர் மகளிர் தொழிற்பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கை..!

Byவிஷா

Jul 25, 2023

சென்னையில் உள்ள அம்பத்தூர் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அம்பத்தூரில் அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு தையல் பயிற்சியும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு எஸ்சிவிடி மற்றும் என்சிவிடி பயிற்சி, இரண்டு ஆண்டுகளுக்கான கட்டட பட வரைவாளர் பயிற்சியும், ஓராண்டு ஸ்டேனோகிராபி பயிற்சியும் வழங்கப்படுகின்றது.
இந்த பயிற்சிகளுக்கான சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் இதில் பயிற்சி பெற விருப்பம் உள்ள மாணவிகள் தங்களின் மதிப்பெண் சான்று, ஜாதி மற்றும் மாற்றுச் சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவிலான ஐந்து புகைப்படங்கள் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இந்த பயிற்சியில் சேரும் மாணவிகளுக்கு உதவித்தொகையாக மாதம் தோறும் 750 ரூபாய், இலவச பஸ் பாஸ், மிதிவண்டி, பாட புத்தகங்கள், மொழிகள் மற்றும் காலணிகள் வழங்கப்படும் எனவும் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.