• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

நான் நம்பர் 1-லாம் இல்லப்பா? – சமத்து நடிகை!

நான் நம்பர் 1 ஹீரோயின் இல்லை, அந்த இடத்தை பிடிக்க இன்னும் உழைக்க வேண்டும் என நடிகை சமந்தா கூறியுள்ளார். இன்ஸ்டாகிராமில், ask me anything என்ற ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சமந்தா இவ்வாறு பதிலளித்துள்ளார். பல மொழிகளில், பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் சமந்தா.

சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், 7 வருடத்திற்கு பிறகு பிரிவதாக அறிவித்திருந்தனர்.. பிரிவு முடிவால் மன அழுத்தத்தில் இருந்த சமந்தா தற்போது படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

எப்போதும் தன்னை பிஸியாகவே வைத்துக்கொள்ளும் சமந்தா ஜிம் ஒர்க் கவுட், இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோவை பதிவிட்டு என மனக்கவலை போக்கி வருகிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், என்னிடம் எது வேண்டுமானாலும் கேட்கலாம் என்று தலைப்பில் ரசிகர்களிடம் கலந்துரையாடினார்.

அதில், ஒரு நடிகர், சினிமாவில் நம்பர் 1 ஹீரோயின் இடத்தை பிடிக்க விருப்பம் இருக்கா என கேட்டார். அதற்கு சமந்தா, நம்பர் 1 ஹீரோயின் இடத்தை பிடிப்பதை விட, நல்ல படங்களில் நடித்து, எனது நடிப்பு திறனை மக்கள் பார்த்து பாராட்ட வேண்டும் என்பதே எனது ஆசை என்றார்.

நடிகை சமந்தா நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா,சகுந்தலம் உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. இதில், சகுந்தலம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தினை ருத்ரமாதேவி படத்தை இயக்கிய தெலுங்கின் முன்னணி இயக்குநர் குணசேகர், மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு இயக்கி வருகிறார்.