மதுரை திருநகர் சிஎஸ்ஆர் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த பள்ளியின் முன்னாள் மாணவரும் 19 வயதுக்குட்பட்ட ( U19) இந்திய மகளிர் அணி கிரிக்கெட்டின் இளம் வீராங்கனை கமலினி தனது தாயுடன் பங்கேற்று தனது தோழிகள், ஆசிரியர்களிடம் பள்ளியில் பயின்ற நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

மதுரை மாவட்டம் திருநகரில் 25 ஆண்டுகள் பழமையான சி எஸ் ராமாச்சாரி நினைவு பதின்ம மேல்நிலைப் பள்ளி உள்ளது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பயிலும் இந்த பள்ளியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியின் சி எஸ் ஆர் நினைவு அரங்கத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2001 இல் இருந்து 2023 வரை பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இப்பள்ளியின் முன்னாள் மாணவியும் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனை மற்றும் ஐபிஎல் பெண்கள் அணிக்காக மும்பை பெண்கள் அணியில் அதிக ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் பெண் வீராங்கனை கமலனி குணாளன்.
மதுரை திருப்பரங்குன்றத்தை பூர்வீகமாக கொண்ட கமலினி குணாளன் (17 ) பங்குபெற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்:

இந்த பள்ளியில் படித்த நினைவுகள் மறக்க முடியாதது நண்பர்களுடன் சேர்ந்து நிறைய வேலை செஞ்சிருக்கோம் நான் இங்கதான் படிச்சேன் நான் படிச்ச பள்ளிக்கு நானே சிறப்பு விருந்தினராக வந்தது பெருமையாக இருக்கிறது.
இதற்காக பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு 17 வயது ஆகிறது. நான் இந்தியாவுக்காக 19 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை போட்டியில் விளையாடியுள்ளேன் மற்றும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு விளையாடி இருக்கேன் ஐபிஎல் தொடரில் அதிக ஏலத்தில் எடுக்கப்பட்டதற்கு கடின உழைப்பு இல்லாமல் எங்கேயும் இருக்க முடியாது 1.60 கோடி ஏலத்தில் எடுக்கப்பட்டது மறக்க முடியாத தருணம் எனது வாழ்க்கையே மாறிவிட்டது.
இந்தியா-இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் போட்டி பார்த்தீர்களா? சாரிநான் கிரிக்கெட் டிவில பார்க்க மாட்டேன். கிரிக்கெட் செலக்சன் எந்த அளவுக்கு கடினமாக இருந்தது?
நா மதுர பொண்ணு எனக்கு செலக்சன் அப்ப லாங்குவேஜ் பிரச்சனை இருந்துச்சு கிரிக்கெட்டில் பாலிடிக்ஸ் இல்லை திறமை இருந்தால் பால்டிக்ஸ் என்பது கிடையவே கிடையாது எந்த விளையாட்டிலும் திறமை இருந்தால் எங்க வேணாலும் போலாம் பாலிடிக்ஸ் ஒரு பக்கம் வந்தாலும் உங்க திறமை எங்க வேணா எடுத்துட்டு போகும்.

என்னோட அட்வைஸ் பெற்றோர்கள் பிள்ளைகளை நம்பி விடுங்க விளையாடுவாங்க ஆனால் கூடவே இருங்க தனியா போகாம, ஒழுக்கத்தையும் கடின உழைப்பையும் விடக்கூடாது கடின உழைப்பு அரை மணி நேரம் ஒரு மணி நேரம் பண்ணுவதில்லை மூணு மணி நேரம் நான்கு மணி நேரம் கடினமாக உழைக்க வேண்டும்.
கடின உழைப்பும் ஒழுக்கமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னேறலாம் என இந்திய பெண்கள் அணி கிரிகெட் விராங்கனை கமலினி குணாளன் கூறினார்.








