ஒவ்வொரு மனிதர்களின் வாழ்விலும் கடந்த கால நினைவுகள் என்பது ஈடு செய்ய முடியாத மகிழ்ச்சி. இதில் கல்வி கற்றவர்கள் பள்ளி பருவத்தில் இருந்த நினைவுகள் என்பது என்றென்றும் மாறாததாக அமையும்.

அந்த வகையில் மதுரை காமராஜர்புரம் பகுதியில் உள்ள PNUAPT துரைராஜ் மேல்நிலைப் பள்ளியில் 1985 முதல் 89 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக கடந்த ஓராண்டுகளாக whatsapp, Instagram, FaceBook ஊலம முகப்புத்தகங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் மூலமாக இணைந்த முன்னாள் மாணவர்கள் நினைவுகள் மீண்டும் உயிர்பெறும்நாள் என்ற பெயரில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு அதன்படி இன்று காமராஜபுரம் பகுதியில் உள்ள துரைராஜ் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் தங்களது குடும்பத்தினருடன் வருகை தந்தனர் அப்போது பழைய நினைவுகளை நினைவூட்டும் வகையில் 90ஸ் கிட்ஸ் மிட்டாய்கள் என அழைக்கப்படும் தேன் மிட்டாய் ,காசு மிட்டாய் ,உரல் மிட்டாய் இலந்தை பழம், ஜவ்வு மிட்டாய் ,கல்கோனா , கமர்கட்டு மிட்டாய், மம்மி டாடி மிட்டாய் உள்ளிட்டவற்றை வழங்கியும் ஒருவருக்கு ஊட்டிவிட்டு வரவேற்றனர்.
இதனை பார்த்த போது முன்னாள் மாணவர்களின் குழந்தைகள் மகிழ்ச்சியடைந்தனர் பின்னர் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது 1985 முதல் 89ஆம் ஆண்டுகளில் பயின்றபோது பள்ளியின் நடைபெற்ற சுவாரஸ்ய நிகழ்ச்சிகள் மற்றும் ஆசிரியர்களுடனான நினைவுகள் குறித்து கலந்துரையாடினர்.
ஒவ்வொருவரும் சென்று முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் உள்ளிட் ஆசிரியர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றனர். பின்னர் பழைய நினைவுகளை புதுப்பிக்கும் வகையில் அனைத்து மாணவர்களும் ஒன்றிணைந்து தங்களது ஆசிரியர்களுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் உணவுகளை பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் ஒவ்வொரு மாணவர்களாக தங்களது குடும்பத்தினருடன் தலைமை ஆசிரியரை சந்தித்து பேசியபோது உங்களால் தான் நான் வழக்கறிஞராக, மருத்துவராக மாறியுள்ளேன் என ஆசிரியர்கள் கல்வி பயிற்றுவித்தது குறித்தும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொடுத்தது குறித்தும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின்போது உடல்நிலை சரியில்லாத நிலையிலும் தன்னுடன் பயின்ற சக நண்பர்களை சந்திக்க வேண்டும் எனவும் தனக்கு கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என மிகுந்த சிரமத்தோடு நடந்து வந்த முன்னாள் மாணவரை பார்த்து தலைமை ஆசிரியர் கண்ணீர் விட்டு அழுதார்.
பின்னர் தலைமை ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் இலந்தைப்பழம் ,காசு மிட்டாய் , ஜவ்வு மிட்டாய் உள்ளிட்டவைகளை ஊட்டி விட்டு தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
சந்திப்பை தொடர்ந்து தாங்கள் பயின்ற பள்ளி அறைக்கு சென்ற மாணவர்கள் அங்கு அமர்ந்து தங்களது பள்ளிக்கால நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு குறித்து பேசிய தலைமை ஆசிரியர் : 35 ஆண்டுகளுக்கு பின்பாக எனது மாணவர்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது எங்களது பள்ளி மாணவர்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டுமென கூறினோம்.
அதே போன்று இப்போதும் மாணவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் உறவு என்பது என்றென்றும் மறக்க முடியாதவையாக இருக்கிறது என்பதை இந்த சந்திப்பு நிகழ்ச்சி மூலம் தெரிந்து கொண்டேன்.
இது போன்று அவர்களை இணைத்து எங்களை சந்தித்து எங்களிடம் ஆசிர்வாதம் பெற்று எங்களுக்கு நன்றி தெரிவித்தது மறக்க முடியாத நினைவுகளாக உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் மாணவர்களிடையே உறவு என்பது இடைவெளி இருக்கக்கூடிய நிலையில் நான் பயிற்றுவிக்கும் போது தவறு செய்தால் அடித்து சொல்லிக் கொடுப்பேன் ஒரே ஒரு எச்சரிக்கை தான் விடுப்பேன் என தெரிவித்தார்.
என்னுடைய பணி என்பது வெளியில் வைத்து மிட்டாய்களை சுகாதாரமின்றி விற்கக் கூடாது என கூறி பள்ளிக்குள்ளே கடை வைத்து விற்பனை செய்ய அனுமதித்தேன் இன்றைய தினம் அதனையும் மாணவர்கள் நினைவுகூர்ந்து பேசினார்கள்.
என்னிடம் பயின்ற மாணவர்கள் பல்வேறு துறைகளில் பெரிய ஆட்களாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.
இதேபோன்று பேசிய உதவி தலைமை ஆசிரியர் பல ஆண்டுகளுக்கு முன்பாக மாணவர்களை சந்தித்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது.
முன்னாள் மாணவர்கள் பேசும் போது நாங்கள் முதல் முறையாக இந்த பள்ளியில் புது கட்டிடத்தில் மேல்நிலைப் பள்ளியாக உருவானபோது படித்து ஒவ்வொரு நாளுடைய நினைவுகளும் இன்று வந்து சென்றது நாங்கள் வகுப்பறைக்கு சென்று அமர்ந்த போது 11 வயதில் எப்படி இருந்தோமோ அதே போன்ற நினைவுகள் மீண்டும் கிடைத்தது.
தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு நினைவுகளை பகிர்ந்து கொண்டும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்த அவர்களிடம் எங்கள் பிள்ளைகளும் ஆசீர்வாதம் பெற்றிருக்கிறார்கள். எனவே இது போன்ற சந்திப்பு நிகழ்ச்சி என்பது எங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளதாக தெரிவித்தனர்.