மாற்றுக் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

தென்காசி தெற்கு மாவட்டம், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியம் பெத்தநாடார்பட்டியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் முன்னிலையில், பெத்தநாடார்பட்டி ஊராட்சி தலைவர் ஜெயராணி, கலைச்செல்வன் ஏற்பாட்டில் தி.மு.க.வில் இணைந்தனர். தி.மு.கவில் இணைந்த ஆல்பின் ராய், குமார், கனி, சுதன், ராமர்,மாரியப்பன், சார்லஸ், முருகன், சுரேஷ்குமார், விஜயகுமார், வைகுண்ட ராஜா, மனோஜ்,சதீஷ்,அஜித், கார்மேகம், சூரியமுத்து, மாரி, பவுன்ராஜ், அபின் உள்ளிட்டோருக்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, கழுநீர் குளம் ஊராட்சி தலைவர் கை.முருகன், கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.