• Wed. Mar 26th, 2025

மதுரை விமான நிலையத்தில் டோல்கேட்டில் வட மாநில ஊழியர்கள் கூடுதல் பணம் கேட்பதாக குற்றச்சாட்டு – எம்பி மாணிக்கம் தாகூர் ட்வீட்…

ByKalamegam Viswanathan

Jan 30, 2024

மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்த பயணி ஒருவரிடம் அங்குள்ள டோல்கேட்டில் வேலை செய்யும் தனியார் வட மாநில ஊழியர் கூடுதல் பணம் கேட்பதாக அந்த பயணி காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார் இது வைரலானது.

இந்த நிலையில் இது குறித்து விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தனது X தலத்தில் பதிவிட்டுள்ளதாவது:

இந்த சம்பவம் குறித்து மதுரை விமான நிலைய இயக்க நேரம் பேசினேன் இந்த கொடுமைக்கு காரணமான ஊழியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதை வெளிப்படுத்தியவரை நான் பாராட்டுகிறேன். மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு எனது வேண்டுகோள், இந்த பகல் கொள்ளை குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
மதுரை விமானநிலையத்தில் பார்க்கிங் கட்டணம் அதிகமாக வசூல் செய்யப்படுவதாக வரும் குற்றச்சாட்டு வருவது குறித்து விமானநிலைய ஆலோசனைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பொழுது அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தார்கள்.

கீழே உள்ள காணொலி அந்த குற்றச்சாட்டின் உண்மையை அம்பலப்படுத்துகிறது. இதற்கு பொறுப்பான ஒப்பந்தக்காரர் மற்றும் வசூலித்த நபர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வணிக மேலாளரிடம் விளக்கம் கோரப்பட வேண்டுமென மதுரை விமானநிலைய இயக்குநரை கேட்டுக்கொள்கிறேன்.