• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அதெல்லாம் நீக்க முடியாது.. எடப்பாடிக்கு ‘நோஸ் கட்’ கொடுத்த ஸ்டாலின்!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில், ஜெயலலிதா மறைந்தபோது அவரது மரணத்தில் எழுந்த சந்தேகம் தீர்க்கப்படுமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்ததாக, திமுக உறுப்பினர் சுதர்சனம் குறிப்பிட்டார். இதுதொடர்பாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யவிருப்பதாகக் கூறினார்.

நீதிமன்றத்தில் உள்ள ஒரு விஷயத்தைப் பற்றி பேசுவது அவையின் மரபு அல்ல என்றும், அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வழக்கை விரைந்து முடிக்கத் தான் உறுப்பினர் சுதர்சனம் பேசினார் என்றும், அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க தேவை யில்லை என்றும் விளக்கம் அளித்தார்.