

அடையார் ஆற்றங்கரையோரம் குடியிருப்புவாசிகளை அகற்ற மாநகராட்சி அறிவித்ததை கண்டித்து அனைத்து அரசியல் கட்சி சார்பாக பொது மக்களுக்கு ஆதரவு அளித்துள்ளது.
சென்னை ஜாபர்கான் பேட் காசி தியோட்டர் முதல் நெசப்பாக்கம் வரை அடையார் ஆற்றங்கரையோரம் வசிக்கும் குடியிருப்பு வாசிகளை அகற்ற மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதற்கு குடியிருப்பு வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கு ஆளும் காட்சிகளை தவிர மற்ற இதர அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து கே.கே.நகரில் அமைந்துள்ள மாம்பலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுடன் இணைந்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த கோரிக்கை மனுவில் இங்கு நாங்கள் 4 தலைமுறைகளாக வசித்து வருகிறோம் எங்களது வாழ்வாதாரம் இதை சுற்றியே தான் உள்ளது எங்கள் குழந்தைகள் பள்ளியில் படித்து வருகிறார்கள் இதனால் எங்களுக்கு ஆற்றங்கரையோரம் சுவர் எழுப்பி தர வேண்டும் இல்லையன்றால் 5 கி.மீ. சுற்றளவுக்குள் மாற்று இடம் ஒதுக்கி தர வேண்டும் அதற்கு தமிழக அரசு உத்தரவாதம் தந்துவிட்டு வீடுகளை எடுத்து கொள்ளட்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
