• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

தமிழகம் முழுதும் சிறு – குறு தொழில் சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்

Byp Kumar

Apr 18, 2023

தமிழக அரசு அறிவித்த மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுதும்சிறு – குறு தொழில் சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக மதுரையில் மடீட்சியா தலைவர் சம்பத் பேட்டி
மதுரை மாவட்ட சிறு – குறு தொழில் சங்கத்தின் தலைவர் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு நிலையான கட்டணத்தை 50 கிலோ வாட் வரை ரூ.35 ஆகவும், 52 கிலோ வாட் வரை ரூ.75 ஆகவும் குறைக்க வேண்டும், உச்ச நேர காலத்தில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கூடுதலாக 25 சதவீத கட்டணம் என்பதை 15 சதவீதமாக மாற்ற வேண்டும், தமிழகத்தில் உள்ள தொழில்பேட்டைகளை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் திட்டத்தை கைவிட வேண்டும், 20 ஆண்டுகள் கோரிக்கையான MSME நலவாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுதும் உள்ள சிறு – குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன,

எப்ரல் 20 ஆம் நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள 20,000 சிறு – குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளன, அதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது” என கூறினார்