• Tue. Mar 21st, 2023

என் உயிர் அனைத்தும் தமிழ் மண்ணுக்கு தான்-ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்

Byகாயத்ரி

Jul 25, 2022

முன்னாள் தமிழக பாஜக தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன் தற்போது தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் ஆளுனராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் முரசொலியில் சமீபத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் தமிழிசை குறித்து விமர்சிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”தமிழ் எனது பெயரில் மட்டுமல்ல.. உயிரிலும் இருக்கிறது. தமிழகத்தின் மகளான நான் மூக்கையும், வாலையும் தமிழகத்தில் நீட்ட வேண்டியதில்லை. என் உடல், உயிர் அனைத்தும் தமிழ் மண்ணுக்குதான். ஒரு தமிழச்சியாக எனது கருத்துகளை கூறுவதற்கு எனக்கு முழு சுதந்திரம் உள்ளது. தமிழிசை என்றும் தமிழிசையாக தான் இருப்பேன். ஹிந்திசையாக மாறமாட்டேன் என்பதை உறுதியாக கூறுகிறேன். ஹிந்தி திணிப்பு ஹிந்தி திணிப்பு என்று இல்லாத ஒன்றை மக்கள் மீது கருத்து திணிப்பு செய்ய வேண்டாம். மோடி அரசு என்ன செய்தாலும் அதனுடைய நற்பலன்கள் மக்களுக்கு வந்து சேர்ந்து விடக்கூடாது என்பதற்காகவும், அப்படி நற்பலன்கள் மக்களை சென்று சேர்ந்தாலும் அது மோடியின் பெயரால் வந்து விட கூடாது என்பதற்காக தான் நீங்கள் செய்யும் பல நிகழ்வுகள் காட்டிக் கொண்டு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *