• Fri. Apr 26th, 2024

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணை கட்டிய பொறியாளர் அலெக்ஸாண்டர் மிஞ்சினின் 154வத பிறந்தநாள்விழா கொண்டாட்டம்..!

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையை கட்டிய பொறியாளர் அலெக்ஸாண்டர் மிஞ்சினின் 154 வது பிறந்தநாள்விழா அணையின் கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் மாலையணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய அணைகளில் ஒன்றான பேச்சிப்பாறை அணையை கட்டிய பொறியாளர்களில் முக்கியமானவரான ஹ_ம்பையர் அலெக்ஸாண்டர் மிஞ்சின் என்பவர் 1868ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தில் உதகமண்டலத்தில் பிறந்தார். பிரிட்டனில் பொறியாளராக பணியாற்றியவரான அலெக்ஸாண்டர் மிஞ்சின் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிகாலத்தில் பேச்சிப்பாறை அணையை கட்டினார். மூக்கன்துரை என்று அப்பகுதி மக்களால் அன்போடு அழைக்கபட்ட அலெக்ஸாண்டர் மிஞ்சின் தனது 45வது வயதில் 1913 அன்று இயற்கை எய்தினார்.

இவரது பிறந்தநாளான அக்கோபர் 8ஆம் தேதி ஆண்டுதோறும் விவசாயிகள் அவரது நினைவிடத்தில் கொண்டாடி வருகின்றனர். அலெக்ஸ்ண்டர் மிஞ்சின் அவர்களின் 154வது பிறந்தநாளையொட்டி பேச்சிப்பாறை அணையின் கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழக தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைதொடர்ந்து விவசாயிகளும் பொதுமக்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் குமரி நீர்பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ மற்றும் விவசாயிகள் புலவர் செல்லப்பா, முருகேசபிள்ளை, ஹென்றி, பத்மதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *