• Fri. Apr 26th, 2024

பிரபல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் உடல்நலக்கூறைவால் சற்றுமுன் காலமானார்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரைப்பட பாடலாசிரியராகவும், கவிஞராகவும், தமிழ் மொழி அறிஞராகவும் பல முக்கியமான பங்களிப்புகளை தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கியுள்ளவர் கவிஞர் பிறைசூடன்.இதுவரை 400 திரைப்படங்களில் 1,400 பாடல்களும் 5000 பக்திப் பாடல்களும்,100 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்களும் இயற்றியுள்ளார்.தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை 1996 ஆம் ஆண்டில் தாயகம் திரைப்படப் பாடல்களுக்காகவும், 1991 இல் என் ராசாவின் மனசிலே பாடல்களுக்காகவும் பெற்றார்.தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் “கலைச்செல்வம்” விருதையும் பெற்றிருக்கிறார். இவர் 2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கபிலர் விருது பெற்றுள்ளார்.

சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வசித்துவந்த கவிஞர் பிறைசூடன், உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இந்தத் தகவலை அவருடைய மகன் உறுதி செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *