அழகப்பபுரம் பேரூராட்சியில் மக்கள் நலத்திட்ட வளர்ச்சி பணிகளுக்கு முட்டுக்கட்டை போடும் செயல் அலுவலரை கண்டித்தும், செயல் அலுவலரை மாற்றும் வரையிலும் பேரூராட்சி மன்ற தலைவர் அனிற்றா ஆண்ட்ரூஸ் தலைமையில் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் துணைத் தலைவர் ஆண்ட்ரூஸ் மணி, கவுன்சிலர்கள் பிரகாஷ், ஜஸ்டின், கிறிஸ்டி, ஜமுனா, ஜெகன், கிறிஸ்டோபர் முத்தரசு, ராதா, ஜார்ஜ் மலர்க்கொடி, ராணி புஷ்பம், வனிதா ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.