• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

செஸ்போட்டியில் முதலிடம் பிடித்தமாணவருக்கு அழகுராஜா பழனிச்சாமி வாழ்த்து

ByA.Tamilselvan

Jul 23, 2022

சென்னையில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற செஸ் சாம்பியன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவருக்கு சமூக சிந்தனையாளர் பேராசிரியர்.முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற உள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட அளவில் நடைபெற்ற தகுதி தேர்வில் முதலிடம் பெற்று தேர்வாகியுள்ள மாணவர் மு ராகவ கபிலுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
திருநெல்வேலி பெருமாள்புரத்தைச் சேர்ந்த மாணவர் ஒலிம்பியாட் செஸ் சாம்பியன் தகுதி தேர்வில் முதலிடம் பெற்று தேர்வாகியுள்ளார். பரிசு மற்றும் கேடயம் வாங்கி உள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தியே அறிந்தேன். அவருக்கு என்னுடைய சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மென்மேலும் மாநில அளவில் நடைபெறும் மற்றும் உலக அளவில் சென்னையில் நடைபெற உள்ள ஒலிம்பியாட் செஸ் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்

சமூக சிந்தனையாளர் பேராசிரியர்.முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி .