

அஜித் என்றாலே பொதுவாக ஆக்ஷன், அதிரடி காட்சிகள், மாஸ் என்ட்ரி இருக்கும். இந்நிலையில், இந்த டிரெண்டை புதிய படத்தில் மொத்தமாக மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ஏகே 61. வலிமையின் பிரம்மாண்ட வசூல் சாதனை, ரசிகர்கள் கொடுத்த பெரும் ஆதரவை தொடர்ந்து அஜித் அடுத்து நடிக்க போகும் ஏகே 61, ஏகே 62, ஏகே 63 படங்களில் தான் அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது.
அஜித்தின் அடுத்த படமான ஏகே 61 படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்குகிறார். ஹீரோ, வில்லன் என அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படம் வங்கி கொள்ளையை மையமாகக் கொண்ட கதை. 2022 ம் ஆண்டு தீபாவளி ரிலீசை குறிவைத்து ஏகே 61 படம் எடுக்கப்பட உள்ளது. இதில் லேட்டஸ்ட் ஷாக் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் வழக்கமான அஜித் படங்களை போல் இல்லாமல் மிக மிக குறைந்த ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே உள்ளதாம். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க போகிறார்.
