

தொடர்ந்து சிறப்பான படங்களை தன்னுடைய எஸ்கே புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்தும் வருகிறார் சிவகார்த்திகேயன். இவரது தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான முதல் படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படத்தில் சிவகார்த்திகேயனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதேபோல படத்தில் நடித்திருந்த சத்யராஜ் உள்ளிட்டவர்களும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்த நிலையில், படம் சிறப்பான வெற்றியை கொடுத்தது.
இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து சமீபத்தில் படத்தை சீனாவில் திரையிடும் முயற்சியை படக்குழு மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் படம் தற்போது 11 நாட்களை தாண்டி சீனாவில் தொடர்ந்து 1000 திரையரங்குகளுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் தற்போது சீனாவில் இருந்து நிலானி என்பவர் ஒருநாள் தான் தமிழ் பெண்ணாக இருந்து படத்தை பார்க்கவுள்ளதாக தெரிவித்து யூடியூப் வீடியோவை பகிர்ந்துள்ளார். அவரின் இந்தப் பதிவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்..

