• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

அஜித்தின் புதிய லுக்…செம மாஸ்

ByA.Tamilselvan

Nov 30, 2022

துணிவு படத்தின்படப்பிடிப்புகள் முடிந்தநிலையில் அஜித் செமமாஸான புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் துணிவு. இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாடல் ‘சில்லா சில்லா’ விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் துணிவு படத்தின் ட்ரைலர் வருகிற 2023ஆம் ஆண்டு புத்தாண்டு அன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் மாதம் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துணிவு படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் டப்பிங் பணிகள் மும்முரமாக நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது அஜித் ஃபுல் ஷேவ் செய்து செமமாஸாக முற்றிலும் புதிய கெட்டப்பில் காட்சியளிக்கிறார். இந்த கெட்டப் விக்னேஷ் சிவன் படத்துக்காக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.