• Fri. Apr 18th, 2025

அஜித் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம்!!

ByAnandakumar

Apr 10, 2025

நடிகர் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் கரூரில் 5 திரையரங்குகளில் இன்று வெளியீடு. அஜித் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து பூசணிக்காய் உடைத்து ரசிகர்கள் கொண்டாட்டம் – இதனால் திண்ணப்ப கர்ணர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி குடும்பம், ரோடு ட்ரிப், கார் ரேஸ் என தனக்கென தனி பாதையை வகுத்து, அதில் பயணித்து கொண்டிருக்கிறார். அஜித் நடிப்பில் இன்று ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.

இந்த படம் அஜித்தின் 63-ஆவது படமாகும். இந்த படத்தில் விடாமுயற்சி படத்தை தொடர்ந்து நடிகை திரிஷாதான் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். கரூரில் தின்னப்பா, கலையரங்கம், அமுதா, அஜந்தா, எல்லோரா என 5 திரையரங்கில் மற்றும் அரவக்குறிச்சி, குளித்தலை ஆகிய பகுதியில் இன்று இந்த படம் வெளியிடப்பட்டது. திரையரங்கம் முன்பு காலை முதலே ரசிகர்கள் குவிந்தனர். முன்னதாக திரையரங்கு முன் வைக்கப்பட்டிருந்த அஜித் கட் அவுட்டுக்கு ரசிகர்கள் பாலபிஷேகம் செய்தனர்.

பின்னர் பட்டாசு வெடித்து, பூசணிக்காய் உடைத்து,இனிப்புகள் வழங்கியும், தாரை தப்பட்டை முழங்க உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில் திண்ணப்பா திரையரங்கம் வெளியே சாலையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.