• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

தலைநகரை திணறடிக்கும் காற்று மாசுபாடு..,18ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை..!

Byவிஷா

Nov 9, 2023

தலைநகரான டெல்லியில் திணறடிக்கும் காற்று மாசுபாடு காரணமாக, அங்கு 18ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது. இதனால் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. இந்நிலையில், தொடக்கப்பள்ளிகளுக்கு வரும் 10-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கவும் பள்ளி கல்விதுறை அறிவித்தது.
அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளின் டிசம்பர் மாத குளிர்கால விடுமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் வரும் 18-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டெல்லி கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.