• Sun. May 5th, 2024

டெல்லியில் செயற்கை மழைக்கு அரசு ஆலோசனை..!

Byவிஷா

Nov 10, 2023

டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கலாமா என அம்மாநில அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
காற்று மாசால் டெல்லி நகர் கடுமையாகத் தவித்து மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அரசு காற்று மாசைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உச்சநீதிமன்றமும் மாசு தடுப்பில் அக்கறை காட்டி உள்ளது. உச்சநீதிமன்றம் டெல்லியை சுற்றியுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வயல்வெளி கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
காற்று மாசை தடுக்க செயற்கை மழை வரவைப்பதற்கான திட்டத்தையும் டெல்லி அரசு முன்மொழிந்துள்ளது. டெல்லி சுற்றுச் சூழல் அமச்சர் கோபால் ராய் உள்ளிட்டோர் இதுகுறித்து கான்பூர் ஐ.ஐ.டி. ஆராய்ச்சிக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினர். அந்த குழுவினர் செயற்கை மழைக்குக் குறைந்தது 40 சதவீத மேகமூட்டம் தேவை எனத் தெரிவித்தனர். மேலும் வருகிற 20 மற்றும் 21-ந் தேதிகளில் டெல்லியில் மேகமூட்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே அந்த நாட்களில் திட்டம் சோதனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி அரசு இன்று இது குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து அனுமதி பெற முயற்சிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *