• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஏஐடியூசி கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாவட்ட மாநாடு

ByM.maniraj

Sep 20, 2022

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் ஏஐடியூசி கட்டுமான தொழிலாளர்கள் சங்க 8 வது மாவட்ட மாநாடு கழுகுமலை சமுதாய நலகூடத்தில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் பலவேசம், மாவட்ட நிர்வாக குழு சித்ரா, மாவட்ட குழு சிவராமன் ஆகியோர் தலைமை வகித்தனர். சண்முகராஜ் வரவேற்றார். உத்தண்டராமன், சுடலை, வர்க்கீஸ் ஆகியோர் மாநாட்டு கொடியேற்றினர். மகாராஜன் சார்பில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில துணை பொதுசெயலாளர் கோவை செல்வராஜ் மாநாட்டை துவக்கி வைத்து சிறப்பு உரையாற்றினார். மாவட்ட செயலாளர் சேது, மாநில பொருளாளர் முருகன், மாவட்ட செயலாளர் கரும்பன், மாவட்ட துணை தலைவர் தமிழரசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநாட்டில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ. 6000 வழங்கப்பட வேண்டும். இஎஸ்ஐ, பிஎப் சட்டத்தை கட்டுமான தொழிலாளர்களுக்கு அமல்படுத்திட வேண்டும். விபத்து மரணத்திற்கு ரூ.10 லட்சம், இயற்கை மரணத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கபட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் நிர்வாகிகள் ராமலிங்கம், மீனாட்சிசுந்தரம், கலைமணி, நாகராஜ், முருகன், முத்துச்சாமி, சிதம்பரம், சங்கரலிங்கம், ரகுராமன், சரவணன், எட்டப்பன், ஆனந்தராஜ், ஜெயபாஸ்கர், கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர். ஏஐடியூசி மாவட்ட பொதுசெயலாளர் கிருஷ்ணராஜ் மாநாட்டு நிறைவுரையாற்றினார். நாட்டார் நன்றியுரை கூறினார். ஏற்பாடுகளை கழுகுமலை வட்டார ஏஐடியூசி கட்டுமானம் தொழிற்சங்கத்தினர் செய்திருந்தனர்.