• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

சிவகாசி மாநகராட்சியை அதிமுக கைப்பற்றும்-ராஜேந்திரபாலாஜி பேச்சு

Byகாயத்ரி

Jan 31, 2022

சிவகாசி மாநகராட்சியை அதிமுக கைப்பற்றும் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியுள்ளார்.

விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி, விருதுநகர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய நகராட்சி, சுந்தரபாண்டியம், சேத்தூர், எஸ்.கொடிக்குளம், செட்டியார்பட்டி, மம்சாபுரம், வத்ராயிருப்பு. வ.புதுப்பட்டி ஆகிய 7 பேரூராட்சியில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுடன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் அதிமுக கட்சி அலுவலகத்தில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராஜேந்திரபாலாஜி பேசும்போது, நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினர் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும். அனைத்து மாமன்ற உறுப்பினர், கவுன்சிலர் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெ்றறிபெற வேண்டும். வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரிக்க வேணடும். விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி உட்பட 3 நகராட்சி 7 பேரூராட்சிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள். சிவகாசி மாநகராட்சியை அதிமுக கைப்பற்றும் என்று பேசினார். கூட்ட முடிவில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் அதிமுக கட்சி தலைமையில் வழங்கிய அங்கிகார படிவத்தை முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.