மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலு கா அலுவலகத்தில் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் கடந்த 30ந்தேதி முதல் பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று 4 ந்தேதி காலை 11 மணிக்கு வாடிப்பட்டி அ.தி.மு.க., பேரூர் அலுவலகத்தில் இருந்து அதன் வேட்பாளர் முன்னாள் எம். எல்.ஏ., கி மாணிக்கம் ஏராளமான கழக தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு வந்து பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டுதாலுகா அலுவலகத்தில் 11.41 மணிக்கு சோழவந்தான் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சண்முக வடிவேலிடம் 3 வேட்பு மனுக்களும் அவருக்கு மாற்றாக அவரது மகள் டாக்டர் ஆதிரா தீப்தி 1 வேட்புமனுவும் தாக்கல் செய்தனர்.

உடன் ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், கொரியர் கணேசன், அரியூர் ராதாகிருஷ்ணன், பேரூர் செயலாளர் டாக்டர் அசோக்குமார், வழக்கறிஞர் ராஜ்குமார் ஆகியோர் இருந்தனர். அதேபோல் தமிழக வெற்றி கழக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., எம்.வீ. கருப்பையா மற்றும் அவருக்கு மாற்றாக தாமோதரனும் வேட்புமனு தாக்கல் செய்தனர். உடன் மாவட்டச் செயலாளர் விசால் கிருஷ்ணன் ஒன்றிய செயலாளர் கள் வழக்கறிஞர் தியாகராஜன், தாமோதரன் ஆகியோர் வந்திருந்தனர். முன்னதாக ஏராளமான தொண்டர்களுடன் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வந்தனர்.
மேலும் நாம் தமிழர் கட்சி சார்பாக நாகலட்சுமி திருமாறன் மாற்றாக பவித்ராவும்,இந்து திராவிட மக்கள் கட்சி சார்பாக ராமதாஸ், சுயேச்சை வேட்பாளர்கள் கோபால்,சிவாய ஆதித்யா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.



