• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அதிமுகவினர் வீடுகளில் தேசியக் கொடி பறக்கவிட வேண்டும் -ஓபிஎஸ்

ByA.Tamilselvan

Aug 3, 2022

அதிமுக தொண்டர்கள் அவரவர் வீடுகளில் தேசியகொடியை பறக்கவிடவேண்டும் என தனது அறிக்கையின் வாயிலாக ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நம் நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். இதனையொட்டி ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி என்ற திட்டத்தின்படி, வரும் 13 முதல் 15ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் மூவர்ண தேசியக் கொடியை ஏற்ற பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இதற்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையில், இந்திய நாட்டின் பெருமைக்கும், ஒற்றுமைக்கும், உரிமைக்கும், நல்வாழ்வுக்கும் அடையாளமான தேசியக் கொடி குறித்து அனைவரும் அறிந்துகொள்வது இன்றியமையாததாகும்.சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுறுவதை முன்னிட்டு, மூவர்ணக் கொடியை இல்லங்களுக்கு கொண்டு வந்து பறக்கவிட மக்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி என்ற பிரச்சாரம் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே மூவர்ணக் கொடியை இந்த மாதம் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அவரவர் இல்லங்களில் ஏற்றவோ அல்லது காட்சிப்படுத்தவோ வேண்டும் என அதிமுக தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.