• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கன்னியாகுமரி மாவட்ட அதிமுக சார்பில், திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் உட்பட 100 க்கு மேற்பட்டோர் பங்கேற்பு.

அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தளவாய் சுந்தரம் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு மக்கள் விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், அம்மா மினி கிளினிக் பெயரை மாற்ற முயல்வதாகவும், அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் பதிவதாகவும் குற்றம்சாட்டி கோசங்களை எழுப்பினர். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக வாசல் முன்பு கூடியதால் சிறிது நேரம் பரப்பு ஏற்பட்டது.