குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் மாணவி அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் வைத்து பாலியல் தொல்லைக்கு ஆட்படுத்தியதை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மாணவியின் வழக்கு பதிவு தகவலை பொதுவெளியில் தெரிவித்த காவல்துறை அதிகாரியை கண்டித்தும், கன்னியாகுமரி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஒரே ஆண்டில் மாற்றப்பட்டுள்ளது. நிர்வாகம் திறமையின்மையே காரணம் என தெரிவித்த தளவாய் சுந்தரம்,


மேலும் திருவள்ளுவர் சிலை திறப்பின் 25-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் பெயர்கள் அழைப்பிதழில் வெளியிடாததிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். போராட்டத்திற்கு காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் அதிமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில் தளவாய் சுந்தரம் முன்னாள் அமைச்சர் பச்சை மால், தமிழ்மகன் உசேன் மற்றும் பெண்கள் உட்பட 147_பேர்களை காவல்துறையினர் கைது செய்து பேரூந்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

