இரண்டு இயற்கை இடையூறு காரணத்தால் பொங்கல் தொகுப்பில் இந்த ஆண்டு பணம் இல்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
கன்னியாகுமரிக்கு நாளை(டிசம்பர்_30) முதல்வர் வருகை சம்பந்தமாக விழா நடக்கவிருக்கும் மேடையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன தகவல்கள்.
அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட 25_வது ஆண்டு விழாவும், இரண்டு நினைவு சின்னங்களுக்கு இருக்கும் கடல் மேல் பகுதியில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலம் பணிகளை நம்முடைய பொதுப்பணி அமைச்சர் அண்ணன் எ.வ.வேலு உடன் இருந்து கவனித்து வருகிறார்.
தமிழக முதல்வர் நாளை(டிசம்பர்-30) பிற்பகல் கன்னியாகுமரி வருகிறார்.மாலை 4.30 மணிக்கு, பூம்புகார் படகு துறையில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் மண் சிற்பத்தை திறந்து வைக்கிறார்.
படகில் திருவள்ளுவர் சிலை பாறைக்கு சென்று, இரண்டு நினேவு சின்னங்களை இணைக்கும் கண்ணாடி இழை பாலத்தை திறந்து வைக்கிறார். அதன் பின் திருவள்ளுவர் சிலை மண்டபம் பகுதியில் தமிழ் சான்றோர்களுக்கு விருது வழங்குகிறார். இதன்பின் அய்யன் திருவள்ளுவர் சிலை பகுதியின் மேல் தளத்திற்கு சென்று. அய்யன் திருவள்ளுவர் சிலை பாதத்தில் மலர் தூவி மரியாதை செய்கிறார்.
விழா மேடையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு லேசர் விளக்கை இயக்கி வைத்து, புகைப்படங்கள் கண்காட்சியை பார்வையிடுகிறார். சு.கி. சிவத்தின் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்.
இரண்டாம் நாள் (டிசம்பர்-31)காலை விழா நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. இந்த நிகழ்வில் முதல்வர் உரையாற்றுகிறார். அதன் பின் என் தலைமையிலான( அமைச்சர் தங்கம் தென்னரசு) நிகழ்ச்சிகளுக்கு பின், மூன்றாவது நாளான(ஜனவரி1)ம் தேதி அமைச்சர் அண்ணன் பெரியசாமி தலைமையிலான நிகழ்வில் சிறிய மாற்றம் அந்த நிகழ்ச்சி டிசம்பர் 31க்கு மாற்றப்பட்டு. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை அமைச்சர் அண்ணன் பெரிய சாமி வழங்குவதுடன் விழா நிறைவடைகிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யபட்டுள்ளதால் இரண்டு நாட்கள் மட்டுமே விழா நடைபெறும்.
இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பிற்கு ரூ.250 கோடியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். இரண்டு பெரிய இயற்கை இடையூறை தமிழகம் சந்தித்த நிலையில் ஒன்றிய அரசிடம் நாம் கேட்ட நிவாரணத் தொகை மிகவும் குறைவாகவே கிடைத்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி ஒரு கிலோ, சர்க்கரை ஒரு கிலோ, கரும்பு ஒன்று வழங்கப்படும்.
மகளிர் உரிமைத் தொகை பெறும் தாய்மார்கள் வங்கி கணக்கில் முன்னதாகவே ஜனவரி 10-ம் தேதியே வங்கி கணக்கில் பணம் சென்றடையும் என தெரிவித்தார்.