• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதே போல புஞ்சை புளியம்பட்டி பஸ் நிலையம் முன்பு நகர அதிமுக சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு நகர அவைத்தலைவர் மயில்சாமி தலைமை தாங்கினார் மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் டாக்டர் மகேஸ்வரன்,நகர செயலாளர் ஜி.கே.மூர்த்தி முன்னாள் எம்.எல்.ஏ பி.சிதம்பரம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்,விலைவாசி உயர்வை கண்டித்து எ.பி. சசிபிரபு, பேசினார் நிர்வாகிகள் கே.ஜி.சதீஷ், டி.பாபு, நகர்மன்ற உறுப்பினர் புவனேஸ்வரி ஜெபஸ், ராமசாமி, மற்றும் மகளிர் அணியினர் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்