• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் போதைப் பொருள்களை முழுமையாக ஒழிக்க வலியுறுத்தி, அதிமுக உறுப்பினர் கருப்பு சட்டை அணிந்து மனித சங்கிலி போராட்டம்

அதிமுக தேர்தலில் எந்தந்தக் கட்சிகளுடன் கூட்டணி என்று அதிமுக கட்சிகளை தேடிக்கொண்டு இருக்கும் சூழலில், தே மு தி க., மற்றும் பாமக என இரண்டு கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் சூழலில் பாமக இவர்கள் கூட்டணியை விட்டு, விட்டு பாஜக உடன் கூட்டணியை முடிவு செய்து விட்ட நிலையில், இவர்கள் பாஜகவை விட்டு வெளியே வந்து விட்டோம் என அறிவித்த போதும் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை குறித்து எவ்விதமான கண்டனமும் தெரிவிக்காத நிலையில், எப்போதும் திமுக வை மட்டுமே தொடர்ந்து எதிர்க்கும் வரிசையில், திமுகவிற்கு எதிராக தமிழகத்தில் போதைப் பொருள்களை முழுமையாக ஒழிக்க வலியுறுத்தியும், திமுக அரசைக் கண்டித்தும். இன்று மாலை (மார்ச்_12) கொட்டாரம் சந்திப்பில் மற்றும் மருங்கூர் சந்திப்பிலும், தமிழகத்தில் போதைப் பொருள்களை முழுமையாக ஒழிக்க வலியுறுத்தி, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் தலைமையில் சிலர் கருப்பு சட்டை அணிந்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தளவாய் சுந்தரம், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலர் தாமரை தினேஷ், ஒன்றிய பொருளாளர் தங்கவேல்,பா.தம்பித்தங்கம், இசக்கிமுத்து உட்பட ஏராளமான பேர் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு தி மு க., அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் கண்டித்து குரல் எழுப்பினார்கள்.