தமிழகத்தில் பாஜக உடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி என்ற எண்ணிகை இன்றுவரை இறுதியாகத நிலை நீடித்துக் கொண்டு இருக்கும் சூழலிலும், பிரதமர் மோடி நாளை மறுநாள் (மார்ச்_15)ம் நாள் கன்னியாகுமரிக்கு சற்று தொலைவில் உள்ள விவேகானந்தா கலைக்கல்லூரி வளாகத்தில் கலை.10.30,மணிக்கு நடக்கும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்கும் நிலையில், இன்று காலை விவேகானந்த கல்லூரி வளாகத்தில் பொதுக்கூட்டம் மேடைக்கான பந்தல் கால் பூஜை நடைபெற்று பந்தக்கால் நாட்டப்பட்டது.
இந்த நிகழ்வில் குமரியில் பாஜகவின் முதல்,மூத்த , நாகர்கோவில் சட்டமன்ற பாஜக உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன்,பாஜகவில் அண்மையில் உறுப்பினராக சேர்ந்த விஜய தரணி, நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினர்கள் முத்துராமன், மீனாதேவ்,ஐயப்பன் மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் உட்பட ஏராளமான பாஜகவின் பல்வேறு பொருப்பாளர்கள் பங்கேற்றனர்.
பந்தக்கால் நாட்டிய அடுத்த நொடியே பந்தல் அமைப்பிற்கான பூர்வாங்க பணிகள் வேகம் எடுத்தன.
நிகழ்விடத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன். இராதா கிருஷ்ணன், பாஜகவுடன் கூட்டணி அமைக்க விரும்பும் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை தொடர்கிறது. பிரதமர் வருகைக்கு முன்பே, பாஜகவின் சார்பில் போட்டியிடும் வேட்ப்பாளர்கள், குறிப்பாக தென் மாவட்டங்களில் போட்டி இடும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டல்,
கன்னியாகுமரியில் நடக்கும் பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
விளவங்கோடு இடைத்தேர்தலில் பாஜகவின் சார்பில் விஜயதரணி போட்டியிட வாய்ப்பு கொடுக்க படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்கு. அகில இந்திய பாஜக தான் முடிவெடுத்து அறிவிக்கும். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுடன் மக்களவை தேர்தல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வந்த நேரத்தில். நண்பர் சரத்குமார் அவரது தலைமையில் இயங்கிய ‘சமத்துவ மக்கள் கட்சியை’பாஜக உடன் இணைத்ததை மகிழ்ந்து வரவேற்பதாக தெரிவித்தார்.
பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் வளாகத்தில் நடக்கும் பணிகளை, காவல்துறையின் கண்காணிப்பு பணி ஏற்பாடுகளை, கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை மில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தையும், மொத்தத்தில் காவல்துறை அதிகாரி மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை சரக டி.ஐ.ஜி. ஆய்வு மேற்கொண்டார்.உடன் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவனம் உடன் இருந்தார்.