
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் முன்பு திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் மாவ விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதுக்கு முன்னாள் அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் நத்தம் விசுவநாதன் ஆகியோரத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது “மா”விவசாயிகளுக்கு மாங்காய்களை தமிழக அரசே நேரடி கொள்முதல் செய்திடவும், குறைந்தபட்ச ஆதார விலை செய்ய வேண்டி , ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் அல்லது டன் 5000 ரூபாய் கூடுதல் ஆதார விலையாக நிர்ணயம் செய்து அரசே வழங்க வேண்டும். மாமர கல்லாமை எனும் மாங்காய் 75 சதவீத உற்பத்தி செய்யப்படுகிறது. இது மிகக் குறைந்த விலையில் விலை போகிறது. பராமரிப்பு செலவுகள் உள்ளன. இது தவிர இடுபொருட்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
இதனை குறைக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினர். தொடர்ந்து மா விவசாயிகளுக்கு ஆதரவாக மாங்காய்களை அரசை நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், “மக்களை கொன்று கொண்டு கொண்டுள்ள இந்த திமுக ஆட்சி முடிய இன்னும் பத்து மாதம் இருக்கிறது. பத்து அமாவாசையில் திமுக ஆட்சி இல்லாமல் போய்விடும். அதற்கு வேண்டிய பொறுப்புகளை பூத் கமிட்டி அமைப்பது, போன்ற பணிகளை மேற்கொண்டு ராணுவ கட்டுப்பாடு செயலாற்றி அடுத்த முதல்வராக எடப்பாடியார் வருவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. அதற்குரிய பணிகளை கட்சியினர் செய்ய வேண்டும் – திண்டுக்கல் சீனிவான் பேசினார்.

தொடர்ந்து நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் , சென்னையில் கார் பந்தயம் சர்வதேச அளவில் நடத்தினார். 100 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து நடத்தினர். மக்கள் வரிப்பணத்தை முறையாக செய்யாமல் விளம்பரத்திற்காக வீணடித்தனர். வீண் செலவுகளை குறைத்து விட்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் , குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என நத்தம் விஸ்வநாதன் பேசினார்.”
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் டிராக்டரில் கொண்டு வந்து மாங்காய்களை சாலையில் கொட்டி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
