டெல்லியிடம் கட்சியை அடகுவைத்து தவித்துக் கொண்டிருக்கின்றனர் எனமதுரவாயலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உதயநிதிஸ்டாலின் அதிமுகவை மீது விமர்சனம்.
மதுரவாயல் தெற்கு பகுதி திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, துணை பொது செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்பி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். அப்போது பேசிய உதயநிதி, “என்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு முதல் உரை எழுதியது மதுரவாயல் தொகுதிதான். தமிழ்நாட்டில் பேராசிரியர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அன்று சுயலாபத்துக்காக டெல்லியிடம் ஆட்சியை அடகுவைத்தவர்கள், இன்று கட்சியை அடகுவைத்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். அண்ணாவின் பெயரில் கட்சி நடத்துபவர்கள், இன்று அவரது பெயரையே மறந்துவிட்டனர். நாம் ஆளுநருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். தமிழகத்தின்மீது அக்கறை உள்ளவர்கள் யார் என்பதை அவர் அடையாளம் காட்டியுள்ளார். ஒன்றிய பாஜ ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் ஆகிறது. அவர்கள் செய்தது என்னவென்று பார்த்தால், மக்களிடையே பிரிவினையை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் நாம் காங்கிரஸ் கட்சியை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியதை தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் எதிர்மறை பிரசாரத்தை துவங்கியுள்ளனர். அதை நாம் முறியடிக்க வேண்டும். இந்த கூட்டம்தான், நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கான முதல் கூட்டம். . என்று தெரிவித்தார்.
அதிமுகவினர் கட்சியை அடகுவைத்துவிட்டு தவித்துக் கொண்டிருக்கின்றனர் – உதயநிதி ஸ்டாலின்
