• Fri. Jun 13th, 2025
[smartslider3 slider="7"]

ஈரோடு இடைத்தேர்தல் -32 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழு தி.மு.க. அறிவிப்பு

ByA.Tamilselvan

Jan 23, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி உள்ளிட்ட 32 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை திமுக அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலுக்காக 32 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை தி.மு.க. அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் வேட்பு மனுத்தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரசுக்கு வழங்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அறிவித்து காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், இடைத்தேர்தல் தொடர்பாக 32 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை தி.மு.க. அறிவித்துள்ளது. இந்த தேர்தல் பணிக்குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, செந்தில்பாலாஜி, நாசர், சக்கரபாணி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.