• Sun. May 5th, 2024

மதுரை நாடார் மகாஜன சங்க 72 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது

ByKalamegam Viswanathan

Jan 27, 2024

நாடார் சமூக மக்கள் உழைப்பிற்கும் வணிகத்திற்கும் புகழ்பெற்றவர்கள்.

தன்னுடைய வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி மகிமை சங்கத்தில் பங்களித்து அதன் மூலம் வளர்ச்சிக்கு உதவுகின்றனர். சங்கத்தின் வளர்ச்சி மூலம் பல்வேறு திருமண மண்டபம் பல்வேறு நிறுவனங்களை நிறுவியுள்ளனர்.

கர்மவீரர் காமராஜர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்த கல்லூரி வெள்ளைச்சாமியின் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி என்று பெருமையுடையது. தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருப்பவர்கள் நாடார் சமுதாய மக்கள்.

நாடார் சமூகம் என்பதை உலகறிய செய்தவர் கர்மவீரர் காமராஜரே. தனது வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் கர்மவீரர் காமராஜர் என்று எல்லோரும் அன்போடு அழைக்கப்படுவார். பெருந்தலைவர் என்றால் அது காமராஜரை மட்டுமே குறிக்கும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மட்டுமே குறிக்கும் எனக் கூறியுள்ளார்.

தங்களைச் சார்ந்தவர்கள் வியாபாரத்தில் நஷ்டத்தில் உள்ளனரா என்ற பார்த்து அவர்களுக்கு உதவுவது நாடார் சமூகம் மட்டுமே. தமிழை எளிமையாக கற்க வேண்டும் என்பதில் தினத்தந்தி நாளிதழ் ஆரம்பித்து தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டது. பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்கள் சிவந்தி ஆதித்தனார் சிலையை திறந்து வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடார்களின் முக்கிய தேவையாக வங்கி. அது தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி என துவக்கி அதை கவலையும் செய்ய சில இயக்கமே முற்பட்டது. அதை தடுத்து மாபெரும் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்ற போது அன்றைய அரசாங்கம் அதனை தடுக்க முயன்றது.

ராமச்சந்திர ஆதித்தனார் தலைமையில் வங்கியை மீட்டெடுக்க குழு அமைத்து அதற்கு உறுதுணையாக இருந்தவர் ஜெயலலிதா. தமிழ்நாடு வங்கி மீட்டெடுத்த பெருமை முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்டு சென்னையில் ஆதித்தனார் சாலைக்கு பெயர் சூட்டினார் .

சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது நான் முதல்வராக இருந்தபோது அதனை திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைத்து நிறைவேற்றினேன்.

கரிக்கோல் அண்ணாச்சி அவர்கள் சிறப்பாக செயல்பட்டு நாடார் மகாஜன சங்கம் வளர்ச்சிக்கு பெரும்பாடு பட்டு வருகிறார் அவரை பாராட்டினால் மிகை ஆகாது. காமராஜர் பிறந்தநாள் விழாவை விருதுநகரில் கல்வி பிறந்தநாள் விழாவாக கொண்டாடியதில் நான் கலந்து கொண்டதை பெருமையாக கருதுகிறேன்.

பெருந்தலைவர் காமராஜர் இருக்கையில் தான் பல்வேறு தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டது மின்சார உற்பத்தி அணைகள் போன்றவற்றை உருவாக்க வித்திட்டவர் பெருந்தலைவர் காமராஜர் மட்டுமே.

நாடார் சமுதாய மக்கள் பல்வேறு பகுதிகளில் கல்வி கூடங்கள் அமைக்க ஏற்பாடு செய்தனர் குறிப்பாக கிராமப்புறங்களில் ஆரம்ப பள்ளி நடுநிலைப்பள்ளி போன்றவை அமைத்தனர் ஏழை மாணவர்களின் கல்வித்தரம் உயர நாடார் சமுதாய மக்கள் என்பதில் பெருமை கொள்கிறோம்.

எங்கள் பகுதிகளில் எல்லாம் பனைத் தொழில் அதிகமாக உள்ளது. அத்தொழில் ஈடுபட்டவர்கள் அனைவரும் நாடார் சமுதாய மக்களே. பொதுச்செயலாளர் கறிக்கோல்ராஜ் சுருக்கமாக பேசினாலும் அழுத்தமாக கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

உங்களுக்கு உரிய மரியாதையை அனைத்திந்திய அண்ணா திமுக எப்பொழுதும் வழங்கும். நான் அரசியலில் எடப்படியில் ஈடுபட்டபோது என்னோடு பல்வேறு பகுதியில் தொடர்ந்து பணியாற்றியவர் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவர்தான். மூன்று முறை எடப்பாடி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஆக இருந்தவர் மாதேஷ் என்பதில் தக்கது. நாடார்களோடு நாடார் சமுதாய மக்களோடு நாங்கள் இணக்கமாகவே இருக்கிறோம் என்பது இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நாடார் சமுதாய மக்களோடு இணக்கமாக இருக்கின்ற ஒரே கட்சி அனைத்திந்திய அண்ணா திமுக மட்டுமே. இந்த சமுதாய மக்களுக்காக அனைத்திந்திய அண்ணா திமுக பல்வேறு திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்துவது அனைத்திந்திய அண்ணா திமுக மட்டுமே.

அதிமுக ஆட்சியில் நாடா சமூக மக்கள் வியாபாரத்தில் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி பாதுகாப்பாக செய்தனர். நாடார் சமூகம் மட்டும் இன்றி அனைத்து சமூக மக்களுமே பாதுகாப்புடன் வணிகம் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட முடிந்தது.

இன்றைய சூழ்நிலையில் வணிகத்தில் அச்சப்பட்டு வாழக்கூடிய சூழ்நிலை உள்ளது.

பெருந்தலைவர் காமராஜர் எளிமையின் சிகரம். எளிமையில் இருந்து பெறாமல் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே உழைத்தவர் அவருடைய காலத்தில் மட்டுமே மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது.

மாணவ, மாணவிகள் வயிறார உணவு கொண்டு சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். தலைவர் காமராஜர் வழியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தை செயல்படுத்தி கொண்டு வந்தார்.

காமராஜர் வழியில் பின்பற்றி முதல்வர் ஜெயலலிதா குறிப்பாக பெண்கள் கல்வியில் முன்னேற சைக்கிள் மடிக்கணினி கொண்டு வந்தவர். பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த திட்டங்களின் அடிப்படையிலேயே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் பின்பற்றிய செயல்படுத்தினர் என்பது வரலாறு.

2011 இல்வியில் 32 சதவீதம் மட்டுமே இருந்ததை 2019-ல் 50 சதம் வரை உயர்த்தி உள்ளோம். கல்வியில் முதன்மை மாநிலம் தமிழகம் என்பதில் கொண்டு வந்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

காமராஜர் வழியில் செயல்பட்டு வரும் அண்ணாச்சி கரிக்கோல்ராஜ் இருக்கு அனைவரும் ஒத்துழைப்பு தந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வரும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துகிறோம்.
வெற்றி பெறச் செய்வது உங்கள் கடமை எனக் கூறி எடப்பாடி பழனிச்சாமி உரையை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *