• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அதிமுக பொதுக்குழு ஏற்பாடு பணிகள் திடீர் நிறுத்தம்

ByA.Tamilselvan

Jun 28, 2022

வரும் ஜூலை 11 அதிமுகபொதுக்குழு ஏற்பாடுகளில் இபிஎஸ் தரப்பு மும்முரமாக ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகதகவல்கள் வருகின்றன.
அதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, சென்னை, ஈ.சி.ஆர் விஜிபியில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளதால், பொதுக்குழுவுக்காக மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து, சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத நிலையில், சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பொதுக்குழுவை நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரம் காட்டி வருகிறது.
ஏற்கனவே மீனம்பாக்கம், ஓஎம்ஆர் சாலையில் உள்ள கல்லூரி வளாகம் போன்றவைகளில் பொதுக்குழு நடத்த பரிசீலிக்கப்பட்ட பிறகு மாற்றப்பட்டது. எனவே, வரும் 11ம் தேதி பொதுக்குழு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.