

2022-ம் ஆண்டு முதல் பாதியில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசியாவின் டாப் 100 பிரபலங்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மனிதர்ளின் இயல்பு வாழ்க்கையில் கூகுளும் ஒரு அங்கமாக மாறிவிட்டது. எந்த ஒரு தகவல் வேண்டுமானாலும் நம் நினைவிற்கு வருவது கூகுள் தான். அப்படி உலகின் முன்னணி தேடுபொறி தளமாக இருந்து வருகிறது கூகுள். அந்நிறுவனம் அதன் தளத்தில் அதிகம் தேடப்பட்ட விவரங்கள், நடிகர், நடிகைகள், பிரபலங்கள் குறித்த டேட்டாக்களை அவ்வப்போது வெளியிடும். அந்த வகையில் தற்போது இந்த ஆண்டு முதல் பாதியில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசியாவின் டாப் 100 பிரபலங்களின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய், ரஜினி, சூர்யா, தனுஷ் போன்ற கோலிவுட் நடிகர்களின் பெயர்களும், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் போன்ற தெலுங்கு நடிகர்களின் பெயர்களும் இடம்பெற்று உள்ளன. ஆனால் இந்த லிஸ்டில் நடிகர் அஜித் பெயர் இடம்பெற வில்லை.

இந்த பட்டியலில் நடிகர் விஜய் 22-வது இடத்தில் உள்ளார். அதேபோல் தனுஷ் 61-வது இடத்தையும், சூர்யா 63-வது இடத்தையும், ரஜினிகாந்த் 77-வது இடத்தையும் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் நடிகர் அஜித், கமல்ஹாசன் போன்ற தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் இடம்பெறாதது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பட்டியலில் சல்மான் கான், ஷாருக்கான், அக்ஷய் குமார், ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன், ஹிரித்திக் ரோஷன், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப், வருண் தவான் என பாலிவுட் நடிகர்கள் தான் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் இந்த பட்டியலில் நடிகைகளும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளனர்.
