• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விருதுநகரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் விருப்ப மனு தாக்கல்

Byமதி

Nov 27, 2021

நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்ப மனுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் எஸ்.ஆர்.விஜயகுமரன் தலைமையில்
பெறப்பட்டன.

உடன் விருதுநகர் நகர செயலாளர் முகம்மது நயினார் மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ரவி, மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.தர்மலிங்கம், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் கே.எ.மச்ச ராஜா, கூரைக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் மாரிக்கனி, நகர மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாசறை சரவணன், நகர இலக்கிய அணி செயலாளர் சந்தோஷ பாண்டியன், நகர இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் ராஜேஷ், நகர மீனவர் அணிச் செயலாளர் சரவணன், இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் சுந்தரபாண்டியன் மற்றும் தேர்தல் பணிக்குழுவினர் விருதுநகர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.